கோவை, ஆகஸ்ட் 01 –
மாநகர் மாவட்ட திமுக, தெற்கு சட்டமன்றத் தொகுதி, சிவானந்தா குடியிருப்பு வியாச மந்திர் திருமண மண்டபத்தில் நடைபெற்ற கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண் 68-ல் தமிழ்நாடு முதலமைச்சரின் எல்லோர்க்கும் எல்லாம் 13+ அரசுத் துறைகள், 43+ சேவைகள், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்பங்கள், மருத்துவ விண்ணப்பங்கள், மருத்துவ முகாம்களுடன் உங்களுடன் ஸ்டாலின் முகாமில்
மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா. கார்த்திக் ex.எம்எல்ஏ பங்கேற்று பார்வையிட்டார்.
சிவானந்தா பகுதி திமுக பொறுப்பாளர் டெம்போ சிவா, மத்திய மண்டலத் தலைவர் மீனா லோகு, மாமன்ற உறுப்பினர் கமலாவதி போஸ், 68-வது வட்டக் கழகச்செயலாளர் எஸ். போஸ், தொண்டர் அணி அமைப்பாளர் கராத்தே அர்ஜுனன், அயலக அணி தலைவர் காட்டூர் ராஜ்குமார், பிரின்ஸ், பழனிச்சாமி, பகுதி இளைஞரணி பாபு கணேஷ், மோகன்ராஜ், கே. லாரன்ஸ், லாரன்ஸ், சுரேஷ், ஏசுதாஸ், வி. மணி, ராமமூர்த்தி, பி.எம். ராஜன், சுதாகர், ராஜன், மருதாசலம், மகளிரணி சி.பி. மீனாட்சி, லதா, அருணா, கழக நிர்வாகிகள், முகாம் குழு உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள், பெருந்திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.