கன்னியாகுமரி மே 14
தென்னிந்திய திருச்சபை குமரி பேராயத்தின் கொட்டாரம் வட்டார அளவிலான பேராய மாமன்ற உறுப்பினர்கள் தேர்தல் ஆலோசனை கூட்டம் நேற்று மிஷின் காம்பவுண்ட் சி.எஸ்.ஐ கம்யூனிட்டி ஹாலில் நடைபெற்றது.
ஜோசப் ராபின் வரவேற்றார்.கூட்டத்திற்கு பேராசிரியர் கிறிஸ்டின் பாபு தலைமை வகித்து பேசினார்.என்.சிவபாலன்,ஆபிரகாம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.வேதமணி நன்றி கூறினார் .இதில் ஷாம் மோகன் ராஜ்,ராஜதுரை உட்பட 300-க்கும் மேற்பட்டவர் பங்கேற்றனர் .
.கூட்டத்தில் நடைபெறும் தென்னிந்திய திருச்சபை குமரி பேராயத்தின் தேர்தலில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் பேராசிரியர் கிறிஸ்டின் பாபு தலைமையிலான அணியை ஆதரிக்க வேண்டும் உள்ளிட்டவை குறித்து பேசப்பட்டது.