கன்னியாகுமரி, அக் : 16 ,
கன்னியாகுமரி மாவட்டம் பறக்கை பகுதியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் ரூ.3.75 கோடி செலவில் அமைக்கப்பட்ட ஊரக சுய வேலைவாய்ப்புப் பயிற்சி நிறுவனத்தின் புதிய கட்டடத்தை சுற்றுலாத்துறை அமைச்சர் செ. ராஜேஷ் குமார் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மு. பிரதாப் தலைமை வகித்தார். இம்மையத்தில் கிராமப்புற இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு தையல், அழகுக்கலை, செல்போன் பழுதுபார்த்தல் உள்ளிட்ட பல்வேறு தொழிற்பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. தொடர்ந்து, பயிற்சி முடித்து சுயதொழில் செய்து வரும் 20 தொழில்முனைவோருக்குச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.



