நாகர்கோவில், ஜூலை 19 –
குமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பல்வேறு இடங்களில் சாரல் மழை பெய்தது. குமரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக மீண்டும் சாரல் மழை பெய்து வருகிறது. மலையோர பகுதிகள், அணையின் நீர் பிடிப்பு பகுதிகளிலும் மழை காணப்படுகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக இரவு நேரங்களில் மாவட்டத்தில் வெப்பத்தின் தாக்கம் குறைந்துள்ளது. மாவட்டத்தில் நேற்று காலை வரை கன்னிமார் 2.6, தக்கலை 3, குளச்சல் 3, இரணியல் 6, மாம்பழத்துறை ஆறு, ஆணைக்கிடங்கு, சிற்றார்_1 தல 2, சிற்றார்-2 ல் 2.8, பெருச்சாணி 4.4, புக்தன் அணை 3.2, திற்பரப்பு 3.6, முள்ளங்கினா விளை 2.4, மி. மீட்டரும் மழை பெய்திருந்தது.
மாவட்டத்தில் நேற்று காலை நிலவரப்படி பேச்சு பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 40.5 அடியாகும். அணைக்கு 270 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. 510 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது. பெருஞ்சாணி நீர்மட்டம் 68.95 அடியாகும். அனைத்து 124 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. 385 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது.