கிருஷ்ணகிரி, ஜூலை 26 –
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின் பேரில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் ச. தினேஷ்குமார் ஆலோசனையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த காரப்பட்டு கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாமை கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான மதியழகன் எம்.எல்.ஏ தாசில்தார் மோகன்தாஸ், வட்டார வளர்ச்சி அலுவலர் பாலாஜி, மாநில மகளிர் அணி பிரச்சார குழு செயலாளர் மருத்துவர் மாருதி நாராயணசாமி, ஒன்றிய செயலாளர் மூன்றம்பட்டி குமரேசன் ஆகியோர் கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்தனர்.
இம்முகாமில் மருத்துவ முகாம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, இ-சேவை மையம், ஆதார் மையம், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டை பெறுவதற்கான அரங்கு உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பாக அரங்குகள் அமைக்கப்பட்டது. இம்முகாம்களில் இன்று வழங்கப்படும் விண்ணப்பங்கள் இன்றே இணையதளத்தில் பதிவு செய்யப்படும். இம்முகாம்களில் அளிக்கப்படும் மனுக்களை தமிழ்நாடு முதலமைச்சர் கூர்ந்தாய்வு செய்யப்பட உள்ளது. மேலும், இம்மனுக்களுக்கு 45 நாட்களுக்குள் தீர்வு வழங்கப்படும்.
மேலும், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டை, பெயர் மாற்றம் உள்ளிட்ட மனுக்களுக்கு விண்ணப்பம் அளித்த அன்றே உடனடியாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், இம்முகாம்களுக்கு வருகை தரும் பொதுமக்களின் உடல் நலனைப் பேணும் வகையில் மருத்துவ முகாம்கள் மூலம் மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு சிகிச்சைகள் வழங்கப்பட்டது. தோட்டக்கலைத்துறை சார்பாக ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கத்தின் கீழ் பப்பாளி, எலுமிச்சை, கொய்யா மரக்கன்றுகளை பொதுமக்களுக்கு வழங்கினர்.
இந்த முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை வழங்கினர். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் எக்கூர் செல்வம், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் காந்தி, மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் சத்திய நாராயண மூர்த்தி, ஒன்றிய துணை செயலாளர் ஜெயச்சந்திர பாண்டி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர்கள் மோகன், ஜாவித் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.