தென்காசி, ஜூலை 4 –
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை இராஜா அண்ணாமலைபுரம் அருள்மிகு கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் இந்துசமய அறநிலையத்துறையின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 32 ஜோடிகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்து சீர்வரிசைப் பொருட்களை வழங்கியதைத் தொடர்ந்து தென்காசி மாவட்டம் குற்றாலம் அருள்மிகு திருக்குற்றாலநாத சுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற திருமணத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் கமல்கிஷோர், தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் மரு. ராணிஸ்ரீகுமார், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனிநாடார் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.