இராமேஸ்வரம், ஜூலை 28 –
ராமநாதசுவாமி திருக்கோயில் ஆடி திருக்கல்யாண திருவிழாவை முன்னிட்டு திருத்தேரோட்டம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் தேரை வடம் பிடித்து நான்கு ரத வீதி வழியாக இழுத்து வந்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயில் கடந்த 19-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் நடைபெற்றது. பர்வதவர்த்தினி அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அலங்கரித்து தனி தனியாக வைக்கப்பட்டிருந்த திருத்தேரில் விநாயகர் முருகன் மற்றும் அம்பாள் வைக்கப்பட்டது. இதில் பொதுமக்கள் பக்தர்கள் சுற்றுலா பயணிகள் ஆகியோர் நான்குரத வீதி வழியாக தேரை வடம் பிடித்து இழுத்து வந்தனர்.
இந்த திருத் தேரோட்டத்தில் கோவில் இணை ஆணையர் செல்லத்துரை உதவி ஆணையர் ரவீந்திரன் செயல் அலுவலர் முத்துச்சாமி மேலாளர் வெங்கடேசன் பேஷ்கார்கள் கமலநாதன் முனியசாமி பஞ்சமூர்த்தி நாகராஜ் நகர் மன்ற தலைவர் நாசர்கான் துணைத் தலைவர் தட்சிணாமூர்த்தி நகர்மன்ற உறுப்பினர் அர்ஜுனன் பாஜக மாவட்ட தலைவர் முரளிதரன் அகில இந்திய அதிரப் பணியாளர் சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் தீவு பிராமண சங்கம் அரசியல் கட்சி பிரமுகர்கள் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டனர்.