அஞ்சுகிராமம், ஆக. 4 –
கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் ஒன்றியத்திற்கு உட்பட்டது அழகப்பபுரம் பேரூராட்சி. இந்த பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது. 12 வார்டுகளில் காங்கிரஸ் கட்சியும், இரண்டு வார்டுகளில் பாஜகவும், ஒரு வார்டில் திமுகவும் வெற்றிபெற்றது. பேரூராட்சி தலைவராக காங்கிரஸை சார்ந்த அனிற்றாவும் துணை தலைவராக ஆன்ட்ரூஸ் மணியும் உள்ளனர். இந்நிலையில் பாஜக வார்டு உறுப்பினர்கள் பொண்ணுலிங்கம், ஸ்ரீ கிருஷ்ணன் ஆகியோரது வார்டுகளான 13 மற்றும் 14 வார்டுகளில் சுமார் 3 1/2 வருடமாகியும் எந்த மக்கள் நலன் சார்ந்த பணிகளையும் செய்யவில்லை.
அன்னை வேளாங்கன்னி டூ பொட்டல் குளம் அரச முடு ஜங்ஷன் வரை உள்ள சாலையை சரிசெய்வதாக கூறி பஞ்சாயத்தில் தீர்மானம் வைத்தும் நிதி ஒதுக்காமல் இழத்தடிப்பு செய்து வருகின்றனர். தெருவிளக்கு, குடிநீர், சுகாதாரம் போன்ற எந்த அத்தியாவசிய தேவைகளையும் நிவிர்த்தி செய்யவில்லை. மத்திய, மாநில அரசு திட்டங்கள், பேரூராட்சி பொது நிதியின் கீழ் செய்யப்படும் திட்டங்கள் சட்டமன்ற மற்றும் மக்களவை உறுப்பினர்கள் நிதியின் கீழ் திட்டங்கள் என எதையும் செய்யாமல் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்கவில்லை என்ற காரணத்தினால் புறக்கணிக்கப்படுவதாக பொதுமக்கள் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் பணிகளை செய்து முடிக்க நடவடிக்கை எடுக்கவெண்டுமென பாஜக கவுன்சிலர் பொன்னுலிங்கம் கூறினார்.