அலங்காநல்லூர், ஜூலை 3 –
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஸ்ரீ முனியாண்டி சுவாமி திருக்கோவிலில் 2 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.70 ஆயிரம் செலவில் இலவச திருமணம் நடத்தி வைக்கப்படுகிறது. அதன்படி,
நேற்று காலை 10 மணிக்கு அலங்காநல்லூர் முனியாண்டி சுவாமி கோவிலில் இரண்டு ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது.
மணமக்களுக்கு ரூ.70 ஆயிரத்தில் 4 கிராம் தங்க திருமாங்கல்யம், புத்தாடை மற்றும் மெத்தை, பீரோ, கட்டில் உட்பட திருமண சீர்வரிசை பொருட்கள் அரசு சார்பில் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில், திருக்கோவில் செயல் அலுவலர் சூரியன், அறங்காவலர் குழு தலைவர் அமுல்ராணி ரகுபதி, நகர் செயலாளர் ரகுபதி மற்றும் அறங்காவலர்கள், திருக்கோவில் பணியாளர்கள், உறவினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.