சேலம், ஜூலை 8 –
சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சி கிராமம் புது ஏரிக்கரை அருள்மிகு ஸ்ரீ கோடி முனியப்பன் கோவில் 32-ம் ஆண்டு திருவிழா மிக சிறப்பாக நடைபெற்றது. இத்திருவிழாவில் கோடி முனியப்பனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து சிறப்பு பூஜை நடைபெற்றது. திருவிழாவில் பொங்கல் வைத்தல், கிடா வெட்டுதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்குதல், வழுக்கு மரம் ஏறுதல், வானவேடிக்கை மற்றும் திரைப்பட நடன நாட்டிய நிகழ்ச்சி போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. திருவிழாவில் தேவஸ்தான கமிட்டி நம்பர்கள், இளம் புயல் நண்பர்கள் குழு மற்றும் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு கோடி முனியப்பனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.