தருமபுரி ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் உலக புத்தக தினம் ஏப்ரல் 23-ஆம் தேதி கொண்டாடப்பட வுள்ளதை முன்னிட்டு பொது நூலகங்கள் வாசிப்பதற்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கு உறுதி அளிக்கும் வகையில் உலக புத்தக தினத்தை சிறப்பாக கொண்டாடுவது குறித்த அலுவலர்களுடான ஆலோசனை கூட்டம் ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆட்சியர் பேசியதாவது. உலகம் முழுவதும், வாசித்தல், பதிப்பித்தல் மற்றும் பதிப்புரிமை மூலமாக அறிவு சார் சொத்துக்களை பாதுகாத்து வளர்க்கும் நோக்கத்துடன் சர்வதேச பதிப்பாளர் சங்கத்தால் முன் வைக்கப்பட்டு ஐக்கிய நாடுகள் கல்வி அறிவியல் மற்றும் பண்பாட்டு நிறுவனம் யுனெஸ்கோவால் பிரகனகப்படுத்தப்பட்ட நாளான 19 95 ஏப்ரல் 23-ஆம் தேதி முதல் உலக புத்தக தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அறிவை பரப்புவதற்கும், உலகெ ங்கிலும் உள்ள பல்வேறு கலாச்சாரங்கள் பற்றி விழிப்புணர்வை பெறுவதற்கும் மனிதர்களின் ஒழுக்கத்தை மேம்படுத்தவும். புத்தகம் ஒரு சிறந்த கருவாக உள்ளதால் ஏப்ரல் 23-ஆம் தேதி உலக புத்தக தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நூலகங்கள் வாசிப்பிற்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கு உறுதி அளிக்கும் விதமாக உலக புத்தக தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியில் தர்மபுரி மாவட்டத்தில் சிறப்பாக கொண்டாட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு ஆட்சியர் பேசினார். இந்த கூட்டத்தில் கல்லூரிகளின் இணை இயக்குனர் சிந்தியா செல்வி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜோதி சந்திரா, மாவட்ட நூலக அலுவலர் கோகிலவாணி, தகடூர் புத்தக பேரவை சிசுபாலன், மாவட்ட விளையாட்டு அலுவலர் சாந்தி, நேருயுவகேந்திரா உறுப்பினர்கள் மற்றும் அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
உலக புத்தக தினம் ஏப்ரல் 23-ஆம் தேதி

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics