குளச்சல், டிச. 27-
குளச்சல் இலப் பவிளை சேர்ந்தவர் ஃபைசல் கான் (42). கேரளாவில் விசைப்படகில் மீன்பிடி தொழில் செய்து வந்தார். கடந்த 20-ம் தேதி கேரளாவில் இருந்து ஊருக்கு திரும்பினார். நேற்று முன்தினம் இரவு தூங்க சென்றார். நேற்று காலையில் அவர் வீட்டின் பின்பக்கத்தில் மயங்கி கிடந்தார்.
அவரை உறவினர்கள் வீட்டுக்குள் தூக்கி சென்று பார்த்த போது பேச்சு மூச்சின்றி ஆசை வற்று காணப்பட்டார். பரிசோதித்தபோது அவர் இறந்து விட்டது தெரிய வந்தது.
இது குறித்து குளச்சல் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் அவரது உடலை மீட்டு வழக்கு பதிவு செய்து குமரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் எப்படி இறந்தார் என்பது பிரேத பரிசோதனைக்குப் பின்பு எப்படி இறந்தார் என தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர். இறந்த பைசல் கானுக்கு திருமணமாகி மூன்று பிள்ளைகள் உள்ளனர்.


