கலசலிங்கம் பல்கலையில்,
மகளிர் ”சுயதொழில் வளர்ச்சி” முகாம்!-
ஸ்ரீவில்லிபுத்தூர், கலசலிங்கம் பல்கலையில், புதுடில்லி, டி.எஸ்.ஐ.ஆர் சார்பில் தமிழ்நாடு பட்டுவளர்ப்பு துறை மற்றும் தமிழ்நாடு வாழ்வாதாரப் பணி நிறுவனம், ஆகியவற்றுடன் இணைந்து, இரண்டு நாள் மகளிர் சுயதொழில் வளர்ச்சி முகாம் வேந்தர் முனைவர் கே.ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது.
பல்கலைப் பேராசிரியர்கள் ஜே. டேனி, எஸ். முத்துலட்சுமி, ரெஜினா, யூனியன் வங்கி அதிகாரி சுகன்யா ஆகியோர் முகாமில் உரையாற்றினர். விருதுநகர் மாவட்ட 40க்கும் மேற்பட்ட மகளிர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.
பேராசிரியர் எஸ். முத்துலட்சுமி முகாமை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.