வருகின்ற 11 -11 -2024 முதல் 14- 11 – 2024 வரை திருநெல்வேலியில் ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு சார்பாக மாவட்டங்களுக்கு இடையேயான 17 – வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கு ஹாக்கி போட்டி நடைபெறுகிறது.. இதற்கு திண்டுக்கல் மாவட்ட மகளிர் ஹாக்கி அணி தேர்வு நடைபெற்றது திண்டுக்கல் ராமையம்பட்டியில் உள்ள ஹோலி கிராஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் வழி அனுப்பும் நடைபெற்றது. இதில் பல்வேறு பள்ளிகளில் இருந்து 18 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவ்விழாவிற்கு திண்டுக்கல் மாவட்ட ஹாக்கி சங்கத் தலைவர் நாட்டாண்மை டாக்டர் என்.எம்.பி. காஜாமைதீன் தலைமையில் தாங்கி சிறப்புரை ஆற்றி வழி அனுப்பி வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஹாக்கி சங்க துணைத் தலைவர் மனிதநேயம் வி. ஞானகுரு, ஹாக்கி சங்க உதவி செயலாளர் மகேஸ்வரன், செயற்குழு உறுப்பினர் கென்னடி, பயிற்சியாளர்கள் பாஸ்கரன், பார்த்த சாரதி மற்றும் மேலாளர் சாஜிதா, நெட்பால் சங்க துணை தலைவர் சாதிக் ஆகியோர் வாழ்த்தி வழி அனுப்பினார்கள்.



