தருமபுரி மாவட்டம் ,அரூர் அருகே உள்ள எச்.தொட்டம்பட்டியில் செயல்படும்
பொன்ஐஸ்வர்யம் தொண்டு நிறுவனத்தின் சார்பில் மகளிர் தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பெண்களின் கலந்து கொண்ட கோலாட்டம், மயிலாட்டம், கும்மியாட்டம், கரகாட்டம் மற்றும் பல்சுவை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ்களை பொன் ஐஸ்வர்யம் தொண்டு நிறுவன இயக்குனர் பொன்.பலராமன் கலந்து கொண்டு வழங்கினார். முன்னதாக மகளிர்களுக்கென சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் நூறுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு சிகிச்சைகள் பெற்றனர். நிகழ்ச்சிக்கு வருகை தந்த பொதுமக்கள் அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டு அனைவருக்கும் தென்னகன்றுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தொண்டு நிறுவன நிர்வாகிகள் செல்வம், தீப்பொறிசெல்வம், கிருத்திகா மற்றும் பணியாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பொன்ஐஸ்வர்யம் தொண்டு நிறுவனத்தின் சார்பில் மகளிர் தின விழா



