திண்டுக்கல் நாகல்நகர் ஜும்ஆ பள்ளிவாசலில்
தமிழ்நாடு பிலால்கள் நலச்சங்கத்தின் சார்பாக பிலால்களுக்கு நலஉதவி வழங்கும் நிகழ்ச்சி.
தமிழ்நாடு பிலால்கள் நலச்சங்கத்தின் சார்பாக பிலால்களுக்கு நலஉதவி வழங்குதல் நிகழ்ச்சி திண்டுக்கல் நாகல்நகர் ஜும்ஆ பள்ளிவாசலில் நடைபெற்றது. மாநில தலைவர் A. முஹம்மது யூனுஸ், நாகல்நகர் பள்ளிவாசல் இமாம் M.அப்துல்ரஹ்மான் யூஸுபி, ஜங்ஷன் பள்ளிவாசல் இமாம் Z.நிஜாமுத்தீன் உலவி, முகமதியாபுரம் இமாம் பீர்முகமது, பள்ளிவாசல் செயலாளர் அலாவுதீன் முன்னிலையில், பள்ளிவாசல் தலைவர் K.S.O.P.அஹமது புஹாரி, தமிழ்நாடு பிலால்கள்
நலச்சங்கத்தின் கெளரவ தலைவர் நாட்டாண்மை Ln.Dr.N.M.B. காஜாமைதீன் கலந்து கொண்டு பிலால்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். இந்நிகழ்வில் மாநில பொதுச்செயலாளர் P.A.முஹம்மதுபிலால், மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் M.முஹம்மது அலிபேக், மாநிலத் துணைத் தலைவர் M.A.முஹம்மது ஹனீஃப் சாபிரி, சமூக ஆர்வலர்கள் சாகுல்ஹமீது, சுண்டான் இப்ராஹிம் மற்றும் ஏராளமான பிலால்கள் கலந்து கொண்டனர்.