[1:03 PM, 4/15/2025] +91 96777 06646: நீலகிரி. ஏப்ரல்.16.
நீலகிரி மாவட்டம் ஊட்டி ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த சமத்துவ நாள் விழாவில் 23 பயனாளிகளுக்கு ரூ. 42.37 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு தலைமை கொறடா ராமச்சந்திரன் வழங்கினார். அண்ணன் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு ஊட்டியில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் நடந்த சமத்துவ நாள் விழாவில் 23 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக அரங்கில் அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் சமத்துவ நாள் விழா சிறப்பாக நடைபெற்றது விழாவில் நீலகிரி மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு முன்னிலை வகுத்து பேசினார். அரசு தலைமை கொறடா ராமச்சந்திரன் தலைமை வகித்தார் விழாவில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ. 5.50 லட்சம் மதிப்பில் பல்வேறு தொழில் செய்ய நிதி உதவி சலவ பெட்டிகள் மற்றும் தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டது . மேலும் தாட்கோ மூலம் 10 பயனாளிகளுக்கு ரூபாய் 24.80 லட்சம் மதிப்பில் பல்வேறு தொழில் செய்ய நிதி உதவிகளும் மாவட்ட தொழில் மையத்தில் சார்பில் மூன்று பயனாளிகளுக்கு ரூ. 12.00 லட்சம் மதிப்பில் வாகனங்கள் வாங்க மானிய தொகை என மொத்தம் 23 பயனாளிகளுக்கு ரூ. 42.37 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது தொடர்ந்து அரசு தலைமை கொறடா கா. ராமச்சந்திரன் பேசியதாவது.
[1:03 PM, 4/15/2025] +91 96777 06646: கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் நமது மாவட்டத்திற்கு 2025 , 2026 ஆம் நிதி ஆண்டிற்கு ஆயிரம் வீடுகள் கட்டுவதற்கான அனுமதி ஆணை கிடைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற எண்ணற்ற திட்டங்களை நமது தமிழ்நாடு முதலமைச்சரால் வழங்கப்பட்டு வருகிறது. அத்தகைய திட்டங்களை பொதுமக்கள் முழுமையாக பெற்று பயன்பெற வேண்டும் அரசு திட்டங்களுக்கு பொதுமக்கள் முழு ஆதரவு வழங்க வேண்டும் என அரசு தலைமை பொறுடா பேசினார். முன்னதாக அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திருவுருவப்படத்திற்கு அரசு தலைமை கொறடா மலர் தூவி மரியாதை செலுத்தினார் அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் நடைபெற்ற அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் சமத்துவ நாள் விழாவின் நேரலையை அரசு தலைமை கொறடா காணொளி காட்சி வாயிலாக பார்வையிட்டார். இந்நிகழ்வில் ஊட்டி வருவாய் கோட்டாட்சியர் சதீஷ்குமார், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் பீட்டர் ஞானராஜ் , ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை தனி வட்டாட்சியர் ராஜா சேகரன், ஊட்டி நகர் மன்ற துணைத் தலைவர் ரவிக்குமார், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள் ஜார்ஜ், விசாலாட்சி மற்றும் பல்வேறு அரசு துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சமத்துவ நாள் 23 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி

You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics