தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் மின் கட்டண உயர்வை கண்டித்தும் , தமிழகத்தில் சமீப காலமாக அரசியல் கட்சி பிரமுகர்கள் தலைவர்கள் படுகொலை செய்யப்படும் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும் நாம் தமிழர் கட்சியினர் இன்று மயிலாடுதுறை ஸ்டேட் பேங்க் சாலையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட செயலாளர் தமிழன் காளிதாசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சுற்றுச்சூழல் பாசறை மாநில செயலாளர் காசிராமன் மாநில இளம்பெண்கள் மகளிர் பாசறை செயலாளர் கவிதா அறிவழகன் மாநில ஒருங்கிணைப்பாளர் மணி செந்தில் உள்ளிட்ட ஏராளமானோர் கோரிக்கை பதாகைகளை எந்தியபடி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு எதிராகவும் மின் கட்டண உயர்வை கண்டித்தும், தமிழக அரசை கண்டித்து நிர்வாகிகள் கோஷங்களை எழுப்பினர்.
நாம் தமிழர் கட்சியினர் மயிலாடுதுறையில் கண்டன ஆர்ப்பாட்டம்

You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics