கன்னியாகுமரி ஜன 2
கன்னியாகுமரி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் நேற்று புத்தாண்டு கொண்டாடப்பட்டது.
கன்னியாகுமரி அருகேயுள்ள ஒற்றையால்விளை கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வில் கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மரிய ஜெனிபர் கலந்து கொண்டு கேக் வெட்டி நிர்வாகிகளுக்கு வழங்கி, புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார். மாவட்ட தலைவர் தீபக் சாலோமன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் மைக்கிள் எடில்பெர்ட், பொருளாளர் பன்னீர்செல்வம் மற்றும் நிர்வாகிகள உட்பட நாம் கட்சியை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர்