கன்னியாகுமரி,அக்.27-
குமரி மாவட்டம் பொற்றையடி அடுத்த வைகுண்டபதியில் அமைந்துள்ள படிப்பகம் ,அங்கன்வாடி மையத்திற்கு மின்விசிறி வேண்டும் என நாம் கட்சி நிர்வாகி ஜெனிபரிடம் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து நேற்று அங்கன்வாடி மையத்திற்கு நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை நிர்வாகி ஜெனிபர் மின்விசிறியை வழங்கினார். நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் தீபக்,கலைமணி,ராஜேஷ்,ஜெய்வீன்,ராஜா ,அங்கன்வாடி பணியாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.