தென் தாமரை குளம் ஜன 14
அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் விவேகானந்தர் ஜெயந்தி விழா நடைபெற்றது. இந்நிகழ்விற்கு விவேகானந்தா கல்லூரி அலுவலக உதவியாளர் டி. பாலமுருகன் இறைவணக்கம் பாடினார். விவேகானந்தா கல்விக்கழக தலைவர் ஜி. என். பாலமுருகன் திருவிளக்கேற்றினார். கல்லூரியின் பொறுப்பு முதல்வர் டி. எஸ். ஜெயந்தி தலைமை தாங்கினார். விவேகானந்தா கல்விக்கழகத்தின் துணைத் தலைவர்கள் ஜி. சந்திரமோகன், டி. துளசிமுத்துராம், இணைச் செயலாளர் எஸ். இராதாகிருஷ்ணன், பொருளாளர் டாக்டர். எஸ். பிரியதர்ஷினி, உறுப்பினர்களான டி. ஆதிமகாலிங்கம், பி. வி. ஆனந்த், பொதுக்குழு உறுப்பினர்களான எஸ். ஆர். சுப்பிரமணியன், ஆர். ஐ. பாண்டியன், விவேகானந்தா கல்வியியல் கல்லூரி முதல்வர் முனைவர். எஸ். பையன், தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர் ஆர். ஐ. இராம்குமார் மற்றும் அகத்தர மதிப்பீட்டுக்குழு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் டி. சி. மகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விவேகானந்தா கல்விக்கழக செயலாளர் சி. ராஜன் வாழ்த்துரை வழங்கினார். நாஞ்சில் நாவரசு செல்ல. கண்ணன் சிறப்புரை ஆற்றினார். விவேகானந்தர் ஜெயந்தி விழாவினை முன்னிட்டு நடைபெற்றப் பல்வேறு போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவ- மாணவியர்களுக்கு விவேகானந்தா கல்விக்கழக துணைத் தலைவர் வழக்கறிஞர் கே. எஸ். மணி பரிசுகள் வழங்கினார். விழா முடிவில் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் முனைவர் கு. இளங்குமார் நன்றியுரை வழங்கினார். நிகழ்ச்சிகளைத் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர்கள் முனைவர் எம். பகவதி மற்றும் டி. ஜெஸி ஆகியோர் தொகுத்து வழங்கினர். இந்நிகழ்வில் கல்லூரிப் பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், மாணவ- மாணவியர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.