ஈரோடு மே 15
இந்து முன்னணி சார்பில் வருகின்ற ஜூன் 22 ஆம் தேதி முருக பக்தர்கள் மாநாடு மதுரையில் நடக்க இருக்கிறது. இதை யொட்டி ஈரோடு வில்லரசம் பட்டியில் திண்டல் மற்றும் சூரம்பட்டி நகர் சார்பாக வேல் வழிபாடு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் வக்கீல் முரளி தலைமை தாங்கினார் .சிறப்பு அழைப்பாளராக கொங்கு கோபால் கலந்து கொண்டார். மற்றும் இந்து முன்னணி பொறுப்பாளர் ஜீவா, சதீஷ்குமார், ஜெகத், விமல்,ஆகியோர்கள் நிகழ்ச்சி ஏற்பாடு செய்தனர் .
இதில் சூரம்பட்டி மற்றும் திண்டல் நகர் சார்பாக 150 க்கும் மேற்பட்ட வாகனங்களில் மதுரையில் நடக்க இருக்கும் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு செல்வதாக முடிவு செய்யப்பட்டது