நாகர்கோவில் மாநகராட்சி 37-வது வார்டுக்குட்பட்ட வடலிவிளை அரசு உயர்நிலைப்பள்ளி கூடத்திற்கு கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி ₹ 18 இலட்சம் மதிப்பீட்டில் கட்டபட்ட புதிதாக இரண்டு வகுப்பறைகளை கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் விஜய் வசந்த், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் ரெ.மகேஷ் இணைந்து திறந்து வைத்தார்கள்.
உடன் துணை மேயர் மேரி பிரின்ஸி லதா,மண்டலத்தலைவர்கள் ஜவஹர்,அகஸ்டினா கோகிலவாணி,உதவி செயற்பொறியாளர் ரகுராம், மாமன்ற உறுப்பினர் செல்வம், மாநகர காங்கிரஸ் தலைவர் மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் நவீன்குமார்,மாநகர செயலாளர் வழக்கறிஞர் ஆனந்த்,
பகுதி செயலாளர் சேக்மீரான், மாநகர பொருளாளர் சுதாகர்,
மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அகஸ்தீசன், மாவட்டபிரதிநிதி தொல்லவிளை குமார், செயற்குழு உறுப்பினர் சதாசிவன்,வட்ட செயலாளர் ரவி,மாநகர பிரதிநிதி முருகன் மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்களும் கலந்து கொண்டனர்..