புதுச்சேரி, அக்டோபர் 19 ஸ்ரீராம் குழுமத்தின் முதன்மை நிறுவனமான ஸ்ரீராம் பைனான்ஸ் லிமிடெட் இரு-சக்கர வாகன கடன் தகுதி நிலை வவுச்சர்” என்ற புதுமையான திட்டம் அறிமுகப்படுத்துகிறது. இந்த பண்டிகை காலத்தின் போது தங்களது கனவு பைக் அல்லது ஸ்கூட்டரை வாங்க விரும்புகிற வாடிக்கையாளர்களுக்கு இவ்வகையினத்தில் முதன் முறையாக வழங்கப்படும் இரு-சக்கர வாகன கடன் தீர்வாக இத்திட்டம் இருக்கும்
மேலும்
ஸ்ரீராம் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் எம்.டி & சி.இ.ஓ. ஒய்.எஸ். சக்ரவர்த்தி இந்த முயற்சியைப் பற்றிப் பேசுகையில் இந்த பண்டிகை காலத்தின் போது தாங்கள் விரும்பிய இரு-சக்கர வாகனங்களை வாங்க விரும்பும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இவ்வகையினத்தில் முதன் முறையாக அறிமுகம் செய்யப்படும் இரு-சக்கர வாகன தகுதிநிலை வவுச்சர் என்ற புதிய திட்டத்தை தொடங்குவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.