நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு
உதகையில் பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் சர்வதேச காது கேளாதோர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை
கொடியசைத்து துவக்கி வைத்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது.
கடந்த நான்கு மாதத்தில் மட்டும் 13 லட்சத்தி 12,800 சுற்றுலா பயணிகள் வந்து சென்றுள்ளனர்.
மேலும்
E – PASS முறை நடைமுறையில் இருந்து வரும் நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தால் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை இ பாஸ் நடைமுறையினை நீடிக்கும் எனவும் இதுவரை இரண்டு லட்சத்து 77 ஆயிரம் பேர் இபாஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் பொதுமக்கள் நீலகிரி மாவட்ட பதிவு எண் TN -43 பெற்று இருந்தால் அந்த வாகனங்களுக்கு E-PASS தேவையில்லை என ஆட்சியர் தெரிவித்தார்.