திருப்பத்தூர்:நவ:19, திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் ஒன்றியம் ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு ஊராட்சி புதுமனை பகுதியில் மாவட்ட குழு உறுப்பினர் நிதியில் ரூபாய் 4.50 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி தொடங்கியது அப்பகுதி மக்களின் பல வருட கோரிக்கையான இப்பணி இன்று பூமி பூஜையை ஊராட்சி மன்ற தலைவர்.சுவிதா கணேஷ் தொடங்கி வைத்தார்.
இதில் வார்டு உறுப்பினர் அண்ணாதுரை தம்பிதுரை சமூக ஆர்வலர் சந்திரகாசன் ஊராட்சி செயலாளர். பாலகிருஷ்ணன் ஊர் பொதுமக்கள் என பலரும் பூமி பூஜையின்போது உடன் இருந்தனர்.