அரியலூர், நவ;13
15 ம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சிப்காட் அடிக்கல் நாட்டு விழா மற்றும் அரசு வளர்ச்சி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு அரியலூர் மாவட்டம் வருகை தருவதை ஒட்டி பாதுகாப்பு அம்சங்கள் குறித்து திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் கார்த்திகேயன் I P S ஆய்வு செய்தார். உடன் திருச்சி சரக காவல்துறை துணை தலைவர் மனோகர் I.P.S., மற்றும் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் இருந்தார். இதனைத் தொடர்ந்து கொல்லாபுரத்தில் விழா நடைபெறும் இடத்தை பார்வையிட்டார்கள் மற்றும் பொதுப்பணித்துறையினர் மற்றும் வருவாய் துறை அதிகாரிகளிடம் விழாமேடை அமைப்பு குறித்து கேட்டறிந்தார்கள்.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்