கருங்கல், ஏப்- 30
திங்கள்சந்தையில் இருந்து கருங்கல் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் இலந்த விளை என்ற பகுதியில் நேற்று அதிகாலை 5 மணியளவில் சாலையோரம் நின்ற ஒரு மரம் முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் அந்த வழியாக அரசு பஸ்கள் மற்றும் கனரக வாகனங்கள் செல்ல தடை ஏற்பட்டது.
இதையடுத்து அப்பகுதியினர் இரணியல் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக தீயணைப்பு வீரர்கள் வந்து சாலையில் விழுந்த மரத்தை வெட்டி அகற்றினர். இந்த மரம் விழுந்ததால் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.