நாகர்கோவில் – செப்- 07
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட செண்பகராமன்புதூர் ஊராட்சியில் செயல்பட்டு வரும் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் அங்கு பணிபுரியும் மருத்துவர்கள் செவிலியர்கள் உட்பட அனைவரும் அலட்சியப் போக்கிலே நோயாளிகளை கண்டு கொள்ளாமல் இருப்பதாக அப்பகுதி பொதுமக்கள் பலமுறை அதிகாரிகளிடம் புகார்கள் கூறியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி நேற்று செண்பகராமன் புதூர் அரசு மருத்துவமனையை சக்தி கேந்திரா தலைவர் அக்குவா முத்து தலைமையில் செண்பகராமன் புதூர் ஊராட்சி மன்ற மூன்றாவது வார்டு கவுன்சிலர், 56-வது பூத் தலைவர் பாலசுப்பிரமணியம், பிஜேபி விருந்தோம்பல் பிரிவு துணைத் தலைவர் ராஜா, பாஜக தோவாளை ஒன்றிய மகளிர் அணி செயலாளர் சுந்தரவல்லி ஆகியோர் நேற்று செண்பகராமன்புதூர் அரசு மருத்துவமனையை முற்றுகையிட முயன்ற போது வட்டார தலைமை மருத்துவர் நாகராஜன் முற்றுகையிட முயன்ற பாஜக நிர்வாகிகளுடன் கலந்து பேசி மேலும் இதுபோன்று அவர்கள் நடக்காத வண்ணம் பார்த்துக் கொள்வதாகவும் தற்போது நோயாளிகளை கவனிக்காமல் அலட்சியமாக நடந்து கொண்ட மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததின் அடிப்படையில் முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது. சம்பவம் குறித்து சக்தி கேந்திரா தலைவர் அக்வா முத்து கூறியதாவது எங்கள் ஊரில் அமையப்பெற்றுள்ள இந்த மருத்துவமனை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அனைத்து கிராம மக்களும் வந்து தங்கள் நோய்களுக்கான சிகிச்சைகளை பல வருடங்களுக்கு முறை தரமான முறையில் பெற்று சென்றனர் ஆனால் சமீப காலங்களாக இந்த மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் செவிலியர்கள் உட்பட பணியாளர்கள் யாரும் பொதுவாக நோயாளிகளை கண்டு கொள்வதில்லை சில நாட்களுக்கு முன்பு கூட எங்கள் பகுதியை சேர்ந்த சகோதரி ஒருவர் இழைப்பு நோயினால் அவதியுற்று வீட்டிலிருந்து மருத்துவமனைக்கு நடந்தே சென்று அங்குள்ள மருத்துவரிடம் தனக்கு இழுப்பு நோய் இருப்பதாகவும் மாத்திரைகள் , ஊசி போட்டால் சரியாகிவிடும் அப்படிதான் தான் செய்து வருவதாக கூறியதற்க்கு இங்கு தற்போது பணியில் மருத்துவர்கள் இல்லை எனக் கூறியுள்ளனர் அங்கு பணிபுரியும் மருத்துவர் மருத்துவமனை வளாகத்தில் சக மருத்துவ பணியாளர்களுடன் பேசிக் கொண்டு இருப்பதை அறிந்த சகோதரி அவரிடம் தாங்கள் எனக்கு சிகிச்சை அளிக்கும்படி கேட்டுக் கொண்டதற்கு உன் விருப்பத்திற்கு சிகிச்சை அளிக்க முடியாது அதற்கான சிகிச்சைகள் உண்டான வசதி இந்த மருத்துவமனையில் இல்லை ஆகையால் நீ பூதப்பாண்டி அல்லது ஆசாரிப்பள்ளம் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுக் கொள் என அடாவடியாக கூறியுள்ளார். எந்த நோய்க்காக எந்த இரவு நேரத்தில் சென்றாலும் அதற்கான சிகிச்சை இல்லை, காயம்பட்டவர்களுக்கு கூட மருந்து வைத்து கட்ட மருத்து வருகின்றனர். பூதப்பாண்டி மருத்துவமனைக்கு செல்லுங்கள் அல்லது ஆசாரிப்பள்ளம் மருத்துவமனைக்கு செல்லுங்கள் என அலட்சியமாக முதலுதவிகள் கூட புரியாமல் திருப்பி அனுப்பி வைப்பது பெரும் வேதனைக்குரிய விஷயமாகும் . இந்த மருத்துவமனையின் செயல்பாடுகள் குறித்து கடந்த ஆக – 15, கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக இந்த மருத்துவமனை ஆய்வு செய்து நோயாளிகளுக்கு தரமான மருத்துவம் கிடைத்திடவும் மேலும் நோயாளிகளிடம் அலட்சியமாக நடத்தி வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள், மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் படியும் வட்டார மருத்துவரிடம் புகார் தெரிவித்துள்ளனர் மேலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றால் பொது மக்களை ஒன்று திரட்டி மருத்துவமனை முற்றுகை மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதாக கூறினார்.