சென்னை ஜூலை 18 சென்னை தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் எம்பி இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.
தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு அளித்த வாக்குறுதியை காலம் தாழ்த்தாமல் நிறைவேற்ற வேண்டும்
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கைகள் கொடுக்கப்பட்டன.
அவ்வாறு அளிக்கப்பட்ட
கோரிக்கைகள் நிறைவேற்றாமல் மாற்றுத்திறனாளிகளை போராட்டக்களத்திற்கு தள்ளும் வகையில் தமிழக அரசு செயல்படுகிறது.
குறிப்பாக விண்ணப்பித்து காத்திருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித் தொகை வழங்குதல் 100 நாள் வேலை சட்ட விதிகளின் படி வேலை வழங்குதல் இலவச வீட்டு மனை பட்டா வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்
கோரிக்கைகள் இன்னும் நிறைவேற்றப்படாததால் மாற்றுத்திறனாளிகள் சிரமத்தில் உள்ளனர்.
எனவே தமிழக அரசு இனியும் காலம் தாழ்த்தாமல் மாற்றுத்திறனாளிகளை போராட்டக்களத்திற்கு தள்ளாமல் அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற முன் வர வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் கேட்டுக் கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.