தென்தாமரைகுளம்.டிச.7-
அகஸ்தீஸ்வரம் நாராயணசுவாமி திருக்கோவிலில் திருக்கல்யாண விழாவையொட்டி நேற்று மாலை திரளான பெண்கள் சீர்வரிசைச்சுருள் எடுத்து செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அகஸ்தீஸ்வரம் குலசேகரவிநாயகர் அறநிலையத்திற்குட்பட்ட நாராயணசுவாமி திருக்கோவிலில் திருஏடுவாசிப்பு கடந்த மாதம் 22-ம்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
15-ம்நாளான நேற்று திருக்கல்யாண விழா நடைபெற்றது.இதையொட்டி நேற்று மாலை குலசேகர விநாயகர் கோவிலில் இருந்து ஏராளமான பெண்கள் தாம்பாள தட்டில் தேங்காய், பழவகைகள், வெற்றிலை, பாக்கு, பூ,இனிப்பு வகைகள் வைத்து திருக்கல்யாண சீர்வரிசை சுருள் நாராயண சுவாமி திருக்கோவிலுக்கு மேளதாளங்கள் முழங்க எடுத்துசென்றனர்.
அதனைத் தொடர்ந்து திருக்கல்யாணத் திருஏடுவாசிப்பு நடைபெற்றது.இரவு 8 மணிக்கு அன்னதானம் நடைபெற்றது. 17-ம் நாளான ஞாயிற்றுக்கிழமை பட்டாபிஷேக விழா நடைபெறுகிறது அன்று காலை6-மணிக்கு பணிவிடை, பகல் 11-மணிக்கு உச்சிபடிப்பும்,நண்பகல் 12-மணிக்கு பணிவிடை, பிற்பகல் 2-மணிக்கு பட்டாபிஷேக திருஏடுவாசிப்பும், மாலை 5-மணிக்கு அய்யாவுக்கு பள்ளி அலங்கார பட்டாபிஷேக பணிவிடையும்,6- மணிக்கு நாராயண சுவாமி பூச் சப்பரத்தில் எழுந்தருளி ஊர்வலம் வருதலும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர்கள் செய்து வருகின்றனர்.