கன்னியாகுமரி :ஆக.11,.
குமரி மாவட்டம் முளகுமூட்டில் வைத்து தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் குழந்தைகளுக்கான அறிவு திருவிழா நடைபெற்றது.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் குழந்தைகளிடம் அறிவாற்றலை வளர்க்கும் நோக்கத்துடன் அவர்களுக்கு அறிவியல் பார்வையை ஏற்படுத்தி சிறு வயதிலேயே குழந்தை விஞ்ஞானியாக உருவாக்கும் நோக்கத்தில் துளிர் மாணவர் அறிவுத் திருவிழாவை
ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.
முளகுமூடு குழந்தை இயேசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வைத்து இந்த ஆண்டுக்கான துளிர் அறிவுத் திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
மாவட்டத்திலிருந்து பல்வேறு பள்ளிகளைச் சார்ந்த மாணவ மாணவியர் மற்றும் துளிர் இல்லக் குழந்தைகள்
கலந்து கொண்டனர்.
தொடக்க நிகழ்வில் அறிவியல் இயக்க கௌரவத் தலைவர் செல்லின் மேரி தலைமை தாங்கினார். மாநிலத் துணைத் தலைவர் சசிகுமார் மற்றும் ஜார்ஜ் ஆகியோர் அறிவியல் பாடல் பாடினர்.
மாவட்டச் செயலாளர் சிவ ஸ்ரீ ரமேஷ் அனைவரையும் வரவேற்றார். துணைச் செயலாளர் ஜெனித் தொடக்க உரையாற்றினார்.
கல்லூரி செயலாளர் அருட் சகோதரி முனைவர். நிர்மலா சுந்தர்ராஜ் கல்லூரி முதல்வர் முனைவர் அருள் மேரி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
மாநிலச் செயலாளர் ஜினிதா மாவட்ட நிர்வாகிகள் ஜினோ பாய், விஜயலட்சுமி, செல்ல தங்கம், பத்மதேவன், சுசிலா, நீலாம்பரன், பேராசிரியர் ஆனந்தராஜ்,
டோமினிக் ராஜ்,
ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
குழந்தைகளை ஆறு குழுக்களாக பிரித்து ஒவ்வொரு அரங்கங்கள் மூலம் பல்வேறு அறிவியல் செயல்பாடுகளை செய்து காட்டினார்.
அறிவியல் விளையாட்டு, ஓவியக்கலை, ஒரிகாமி என்னும் காகித கலை, கைவினை கலை, எளிய அறிவியல் பரிசோதனை செய்து காட்டும் அறிவியல் அறிவோம் நிகழ்ச்சி,
தொலை நோக்கி மூலம் சூரியனில் உள்ள கரும்புள்ளிகளை காட்சிப்படுத்தி அவற்றை கண்டு அறியும் செயல்பாடு,
குறும்படங்கள் மூலம் அறிவியல் விழிப்புணர்வு உரையாடல் நிகழ்த்தும் நிகழ்வு மற்றும் ஹிரோஷிமா நாகசாகி தின விழிப்புணர்வு நிகழ்வு என்று பல்வேறு நிகழ்வுகளில் குழந்தைகள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
போதைக்கு எதிராக விழிப்புணர்வு வாசகம் எழுதி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
இந்த நிகழ்வில் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், வானவியல் மன்ற பொறுப்பாளர்கள் கருத்தாளர்களாக கலந்து கொண்டு பயிற்சி வழங்கினார். கல்லூரி பேராசிரியர்கள், அறிவியல் இயக்க ஒன்றிய நிர்வாகிகள் ஆகிய குழந்தைகளை வழிகாட்டினர்.
குழந்தைகளின் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன.
பங்கேற்ற குழந்தைகள் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.