நாகர்கோவில் மார் 07
கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா,குட்கா,புகையிலை போன்ற போதை பொருட்களுக்கு எதிராக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் கடுமையான தொடர் நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.
அதன் தொடர்ச்சியாக சுசீந்திரம் மற்றும் தக்கலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நாகர்கோவில் NGO காலனி பகுதியை சேர்ந்த சசி என்பவரது மகன் விக்னேஷ் குமார் (20), வெள்ளாளன்விளை பகுதியை சேர்ந்த ராஜசேகரன் என்பவரது மகன் நவீன்(22) மற்றும் தக்கலை மஞ்சகுளத்தின்கரை பகுதியை சேர்ந்த யூஜின் ஜெரால்ட் என்பவரது மகன் ஜோஸ்வின்(22) என்பவர்களை சோதனை செய்யும் போது 400 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும் மாவட்டத்தில் தொடர்ச்சியாக கஞ்சா, குட்கா, புகையிலை போன்ற போதை பொருட்கள் விற்பனை செய்யும் குற்றவாளிகள் அதிரடியாக கைது செய்து வருவது குறிப்பிடத்தக்கது.