மதுரை மார்ச் 11,
மதுரை காளவாசல் பகுதியில் மாநகர் போக்குவரத்து காவல் துறையினருடன் இணைந்து போக்குவரத்து துறை (RTO) பொதுமக்களுக்கு இடையூறாக அதிக சப்தம் எழுப்பக்கூடிய வாகனங்களை பரிசோதித்தனர். அதனில் காளவாசல் பகுதியில் அதிகம் சப்தம் எழுப்பக்கூடிய ஹாரன் மியூசிக் ஹாரன் noise pollution எழுப்பக்கூடிய ஹாரன் பயன்படுத்தி வாகன ஓட்டிகளுக்கும் பொதுமக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்திய கனரக வாகனங்களுக்கு அபராதம் விதித்து ஹாரன்கள் நீக்கப்பட்டது. இந்த வாகனம் சோதனையின் போது மாநகர் போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள் தங்கமணி, நந்தகுமார், பூர்ண கிருஷ்ணன் போக்குவரத்து துறை ஆய்வாளர் செல்வம் (தெற்கு RTO ) பங்கேற்று மாநகரில் சப்தம் எழுப்பக்கூடிய வாகனங்களை அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.