கன்னியாகுமரி பிப் 9
கன்னியாகுமரி தொகுதி நாம் தமிழர் கட்சி மாவட்ட தலைவர் தீபக் சாலோமன் விடுத்துள்ள செய்தி குறிப்பில்;
தமிழ் தேசிய அரசியல் எதிர்காலத்திற்கான மிக முக்கிய மைல்கல். எதிர் பார்த்த படியே இந்த இடைதேர்தல் முடிவு நாம் தமிழர் கட்சிக்கு பலத்த வலிமையை பெற்று தந்துள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள கட்சி உறவுகளுக்கு சற்று கர்வமாகவும் உள்ளது. நேர்மையான மக்கள் பணிக்கு மக்களே தந்துள்ள வளர்ச்சி உயரம் களப்பணியாளர்களுக்கு நிறைவையும் தந்து , அரசியல் தளத்தில் அண்ணன் சீமான் அவர்களின் அசாத்திய ஆற்றலையும், நாம் தமிழர் கட்சியின் தமிழகத்தில் இன்றைய அவசியத்தையும் நன்கு உணர்த்துகிறது. சிறப்பாக களமாடியுள்ள அக்கா சீதாலட்சுமி அவர்களுக்கும் தேர்தல் பணி செய்து உதவிய அனைத்து நாம் தமிழர் கட்சி உறவுகளுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.