குளச்சல் டிச 18
குமரி மாவட்டம் குளச்சல் நகராட்சிக்கு உட்பட்ட ஏ.வி.எம் கால்வாயின் அவல நிலையை பலமுறை பத்திரிகை செய்தி வாயிலாக நகராட்சி நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றும் அலட்சியமாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்காமல் மெத்தன போக்கை கடைபிடித்து கண்டு கொள்ளாமல் இருக்கும் குளச்சல் நகராட்சி நிர்வாகம்.
தினம்தோறும் குளச்சல் நகராட்சி சிறுவர் பூங்காவிற்க்கு நூற்றுக்கணக்கான பொதுமக்கள், குழந்தைகள் வந்து செல்வது குறிப்பிடத்தக்கது. இந்த
ஏ.வி.எம். கால்வாயில் குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே உடனடியாக இதில் உள்ள குப்பைகளை அகற்றி சுகாதார சீர்கேட்டில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க விட்டால் மாபெரும் போராட்டம் நடத்த வேண்டியிருக்கும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.