நாகர்கோவில் அக் 14
கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் வட்டம் வடிவீஸ்வரம் தெற்கு கிராமம், வேதநகர் வளனார் தெரு பகுதியைச் சேர்ந்த காலஞ்சென்ற இராமசாமி மற்றும் எலிசபத் இராணி (வயது 49) ஆகியோரின் மகன் செல்வன்.சகாய சஜின்(வயது 26) என்பவர், டைல்ஸ் தொழில் செய்பவர் கடந்த 10.10.2024 அன்று மாலை 3.30 மணியளவில் கட்டிட மேல்மாடியிலிருந்து தவறி விழுந்த விபத்தில் மூளைச் சாவு அடைந்து தனது உறுப்புகளை பாளையங்கோட்டை ஹை கிரவுண்ட் மருத்துவமனையில் தானம் செய்ததால் அவருக்கு 11.10.2024 அன்று நாகர்கோவில் கோட்டாட்சியர் காளீஸ்வரி மலர் வளையம் வைத்து அரசு மரியாதை செலுத்தினார்.