தருமபுரி குமாரசாமி பேட்டையில் ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தைப்பூசம் திருவிழாவை முன்னிட்டு திருக்கோளில் கடந்த ஆறாம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது. பத்தாம் தேதி பால்குடம் ஊர்வலம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து சிவசுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானை திருக்கல்யாண வைபவமும் சிறப்பாக நடைபெற்றது. தைப்பூச திருவிழா வின் முக்கிய நிகழ்வான தமிழகத்தில் முதல்முறையாக பெண்கள் மட்டும் கலந்து கொண்டு திருத்தேர் இழுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு உப்பு, மிளகு போன்றவைகளை தேரின் மீது வீசி நேர்த்திக்கடன் செலுத்தினர். திருத்தேர் திருவிழாவை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. திருவிழாவை முன்னிட்டு பத்தாயிரம் பேருக்கு அன்னதான வழங்கப்பட்டது.



