பூதப்பாண்டி – நவம்பர் – 13-
குமரி மாவட்டம் தோவாளை தாலுகாவின் தலைமையிடமான பூதப்பாண்டியில் செயல்பட்டு வந்த வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்க்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டு நேற்று காலையில் தமிழக முதல்வரால் அந்த புதிய கட்டிடம் திறக்கப்பட தேதி குறிப்பிட்டு இருந்த நிலையில் நேற்று முன்தினம் சம்பந்தபட்ட கட்டிடத்தில் முதல்வர் திறக்கும் முன்பே அதில் பால் காய்ச்சும் சம்பிரதாயம் நடந்ததாக கூறி அதை கண்டித்து தோவாளை ஊராட்சி ஒன்றியத்திற்க்குட்பட்ட 16 ஊராட்சிகளின் தலைவர்களும் ஒன்றிய குழு உறுப்பினர்களும் புதிய கட்டிடத்தின் முன்பு இருந்து இதை கண்டித்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்கள் சுமார் நான்கு மணி நேரம் நடந்த இந்த போராட்டம் அதிகாரிகளின் பல கட்ட பேச்சுவார்த்தையின் அடிப்படையில் போராட்டம் கைவிடப்பட்டது பின்பு இது குறித்து விசாரித்த மாவட்ட ஆட்சி தலைவர் அழகு மீனா இதில் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் அதன் அடிப்படையில் தோவாளை வட்டார வளர்ச்சி அலுவலக மேலாளர் ஆல்வினை தற்காலிக பணி நீக்கம் செய்து உத்தரவிட்டனர் பின்னர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இருவருக்கும் விளக்கம் கேட்டு கடிதங்களும் அனுப்பி உள்ளார்கள்.