இராமநாதபுரம்.ஜுலை:16.கர்மவீரர் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு மண்டபம் மேற்கு ஒன்றியம் தாமரைக்குளம் மற்றும் இரட்டையூரணி ஊராட்சிகளில் அமைந்துள்ள காமராஜர் திருவுருவச்சிலைக்கு ராமநாதபுரம் திமுக மாவட்ட கழக செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் அவர்கள் மாலையணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில் பொதுக்குழு உறுப்பினர் தண்டபாணி, கவுன்சிலர் சுகந்தி சோமசுந்தரம், மாவட்ட கவுன்சிலர் கவிதா கதிரேசன், மாநில விவசாய அணி துணை செயலாளர் குணசேகரன், ராமநாதபுரம் நகர்மன்ற தலைவர் கார்மேகம், இராமநாதபுரம் நகர்மன்ற துணைத்தலைவர் பிரவீன்தங்கம், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் ராஜா, ஒன்றிய பொருளாளர் இரட்டையூரணி ஊராட்சிமன்ற தலைவர் கணேசன், தாமரைக்குளம் ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி கிருஷ்ணன், முன்னாள் ஒன்றிய கழக செயலாளர் கனகராஜ், இரட்டையூரணி சீனி, சுகுணசீலன், சர்மா, நாகபாண்டி, சிவக்குமார், சக்தி, வாலாந்தரவை ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சங்கர், சாமிநாதன், தேவராஜ், கோபிகர்ணன், காரான் லோகநாதன், ஹரிஷ், சாத்தான்குளம் பிரசன்னா மற்றும் கழக நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்றனர். மேலும் பள்ளிக்குழந்தைகளுக்கு இலவசமாக புதிய உடை மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்து.
இதற்கான ஏற்பாடுகளை
ஒன்றிய செயலாளர் பிரவின் செய்திருந்தார்.