கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பெரியார் நகர் பகுதியில் தனியார் தியேட்டர் மற்றும் குடியிருப்பு பகுதியில் காலியாக உள்ள இடத்தில் திடீர் தீ வைத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் உள்ள செடி கொடிகள் எரிந்தது பெரும் விபத்தானது. குறித்து அப்பகுதி குடியிருப்பு மக்கள் தீயணைப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த ஊத்தங்கரை தீயணைப்புத் துறையினர் தீயை சுமார் ஒரு மணி நேரம் போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர். இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது மேலும் இது தொடர்பாக குடியிருப்பு பகுதியில் தீ வைத்த மர்ம நபர்கள் குறித்து ஊத்தங்கரை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



