அரியலூர்,டிச;18
அரியலூர் மாவட்டம் திருமானூர் டெல்டா பகுதிகளில் குறைந்த நாட்களில் திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி திருச்சி நகரத்திலும் அரியலூர் மாவட்டம் தனியார் விதை விற்பனையாளர்களிடம் நெற்பயிருக்கான 110 நாட்களில் அறுவடைக்கு வரும் அம்மன் பொன்னி விதைகளை கிலோ ரூ150 வரை செலுத்தி தனியாரிடம் வாங்கிய விதைகளை நாற்று விட்டு நெற்பயிர்களை நடவு செய்த போது நடவு செய்த 20 முதல் 30 நாட்களில் நெற்பயிரில் கதிர் வந்ததால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்து அறுவடை பருவத்தை எட்டி விட்டது எனவும் உடனடியாக விவசாயிகள் ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதனை அடுத்து
ஆய்வுக்கு வந்தனர் பல்வேறு வேளாண் துறைகள் சார்ந்த அலுவலர்கள் குழுவினை அரியலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் ஆய்வுக்கு அனுப்பினார். அதன்படி ஆய்வுக்கு வந்த அதிகாரிகளிடம் விவசாயிகள் தங்களது வயல்களை காண்பித்து விதை தயாரிக்கும் நிறுவனத்தை மூட வேண்டும் எனவும் தரமற்ற விதைகளை விநியோகித்த தனியார் விதை நிறுவனங்கள் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் செலவாகி உள்ளதாகவும் அதனையாவது நிவாரணமாக பெற்றுத்தர வேண்டும் எங்களது வாழ்வாதாரமே போய்விட்டது என அழுது புலம்பினர். கந்து வட்டிக்கு கடன் வாங்கியும் வங்கிகளிலும் கடன் வாங்கியும் விவசாயம் செய்கிறோம் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி விட்டதாகவும் உடனடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.
மேலும் இதுகுறித்து அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் தங்க சண்முக சுந்தரம் அதிகாரிகளிடம் கூறும் போது வேளாண்துறை சார்பில் விதைகளை நடமாடும் விதை வழங்கும் பணிகள் மூலம் விதைகளை வழங்கிட நடவடிக்கைகள் எடுத்திருந்தால் விவசாயிகள் தனியாரிடம் விதைகளை வாங்கி இருக்க மாட்டார்கள். கடந்த ஆண்டும் இதே தனியார் விநியோகம் செய்த அம்மன் பொன்னி விதைகள் குறைந்த நாட்களில் அறுவடைக்கு வந்து ஏக்கருக்கு 10 மூட்டை மட்டுமே கிடைத்தது மகசூல் இழப்பை ஏற்படுத்தியது இதனை தடுக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் குறை தீர் கூட்டத்தில் பேசியதனையும் குறிப்பிட்டார். மேலும் அதிகாரிகளிடம் நெற்பயிர் நடவு சீசனில் நடமாடும் உயிர் உரங்கள் கேவிகே மூலமும் நடவடிக்கைகள் எடுக்க பூஞ்சை நோய்களால் நெற்பயிர் பாதிப்பிலிருந்து தடுக்க இயலும் எனவும் தற்போதைய வெள்ள காலத்தில் பயிர்கள் ஊக்கமிழந்து காணப்படுகிறது போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் வருங்காலத்தில் தனியாரிடம் விதைகளை வாங்கி ஆண்டுதோறும் அவதிக்குள்ளாகும் நிலையை போக்கிட விவசாயகளை தரமான விதைகளை உற்பத்தி செய்ய விதை விவசாயி கையில் என்ற முன்னோடி திட்டத்தை செயல்படுத்த அறிவுறுத்த வேண்டும் அதற்கான ஆர்வமுள்ள விவசாய குழுக்களை உருவாக்கிட விரைந்து திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். கரைவெட்டி கிராமத்தில் 150 ஏக்கரும் வெங்கனூர் பகுதிகளில் 100 ஏக்கருக்கும் மேலாக பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது முதல் கட்ட ஆய்வில் எனவே குறைந்தபட்ச அவகாசம் போதாது மாவட்ட ஆட்சியர் கூடுதல் அவகாசத்தை கொடுத்து முறையாக பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் தகவல் தர வருவாய்துறை மூலம் ஒலிபெருக்கிகளில் தகவல்களை தர வேண்டும் அப்போது தான் முழுமையாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் தகவல்களை திரட்ட இயலும் மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றார். இந்த ஆய்வு கரைவெட்டி வெங்கனூர் பகுதிகளில் நடந்த போது வேளாண் அறிவியல் மைய தொழில்நுட்ப வல்லுநர்கள் அழகு கண்ணன் திருமலைவாசன் , திருச்சி மாவட்டம் விதை சான்று துறையைச்சார்ந்த விதை ஆய்வு துணை இயக்குநர் ராஜேஸ்வரி விதை ஆய்வாளர்கள் சேகர் மோகன்தாஸ் சிவக்குமார் விதை சான்று அலுவலர் இராமலிங்கம் வேளாண்மைதுறை இணை இயக்குநர் கீதா துணை இயக்குநர் மத்திய மாநில திட்டம் கணேசன் உதவி இயக்குநர் சாந்தி விதை தரக்கட்டுப்பாடு உதவி இயக்குநர் ராதாகிருஷ்ணன் துணை வேளாண்மை அலுவலர் கொளஞ்சி மற்றும் வருவாய்த்துறை அலுவலர்களும் முன்னோடி விவசாய சங்க பிரதிநிதிகளும் உடன் இருந்தனர். ஆய்வின் முடிவில் அரசுக்கு அறிக்கை அளித்து விரைந்து நடவடிக்கைகள் எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர்.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்