திருச்சுளி கலைக்கல்லூரி மாணவர்கள் திடீர் போராட்டம் திருச்சுளி .விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே மேலேந்தல் பகுதியில் செயல்பட்டு வரும் திருச்சுழி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் குடிநீர், இருக்கை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி அரசுக்கல்லூரி மாணவர்கள் திடீரென கல்லூரி வளாகத்திற்குள் வெயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் கல்லூரி வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்களின் பேச்சு வார்த்தைக்கு பிறகு போராட்டத்தை கைவிட்ட மாணவர்கள் அமைதியாக வகுப்பறைக்கு கலைந்து சென்றனர்.
இந்த திருச்சுழி அரசு கலைகல்லூரி
Rs.16.46 கோடி செலவில் கட்டப்பட்டதை
கடந்த 27/02/2024 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைக்கப்பட்டது குறிப்பிடதக்கது.