சிவகங்கை,மார்ச்29
செட்டிநாடு வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இறுதி ஆண்டு பயிலும் மாணவிகள் ஹேமலதா.V, அபர்ணா.S, கௌசிகா.K உலகம்பட்டி கிராமத்தில் ஊரக வேளாண் அனுபவ பயிற்சி பெற்று வருகின்றனர் . இதன்படி அவர்கள் விவசாயிகளுக்கு தேமோர் கரைசல் குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனர். தேமோர் கரைசலானது தேங்காய் பால் மற்றும் புளித்த மோர் கலந்த கலவையே ஆகும். இந்த கரைசலை மண்பானை (அல்லது) பிளாஸ்டிக் வாளியில் 7 நாட்கள் ஊறவிடவும்.7 நாள்களுக்குப் பிறகு நன்கு புளித்திருக்கும்.
ஒரு லிட்டர் தேமோர் கரைசலுடன் 10 லிட்டர் தண்ணீர் கலந்து பயிர்களுக்கு தெளிக்கலாம். ஒரு ஏக்கருக்கு பத்து தெளிப்பான் அளவுக்கு தெளிக்க வேண்டும்.
இந்த கரைசலுக்கு பயிர்களை வளர்க்கும் சக்தியும்,பூச்சிகளை விரட்டும் தன்மையும் உண்டு. பூ பிடிக்கும் பருவத்தில் இதை தெளிப்பதால் பூக்கும் திறன் அதிகரிக்கும். இந்த கரைசல் ‘ என்று சொல்லப்படும் வளர்ச்சி ஊக்கிக்குச் சமமான ஆற்றல் கொண்டது என்பதையும் கிராம மக்களிடம் எடுத்துரைத்தனர்.