தாம்பரத்தில் பஹல்காம் பயங்கரவாதத்தை கண்டித்தும் தாக்குதலில் உயிரிழந்தவர்களுகாக எஸ்.டி.பி.ஐ.கட்சியினர் சார்பில் மெழுவர்த்தி ஏந்தி அமைதி கூட்டம் நடைப்பெற்றது.
தாம்பரம் பேருந்துநிலையம் முன்பு செங்கல்பட்டு மாவட எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் பஹல்காம் பயங்கரவாதத்தை கண்டித்தும் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தும் அமைதி மற்றும் ஒற்றுமையை வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ. கட்சியின் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பொதுசெயலாளர் ரபீக் முகம்மது தலைமையில்
மெழுகுவர்த்தி ஏந்தும் அமைதிக் கூட்டம் நடைப்பெற்றது.
இதில் சுமார் 50க்கும் மேற்பட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் பஹல்காம் தாக்குதல் மனிதநேயத்தின் மீதான கொடூரத் தாக்குதல் என்பதை வலியுறுத்தியும், இந்த தாக்குதலை கண்டித்து மெழுவர்த்தி ஏந்தி அமைதி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் சிறப்பு அழைப்பாளராக மண்டல ஊடக அணி பொறுப்பாளர் தமீம் அன்சாரி மற்றும் மாவட்ட ஊடக அணி பொறுப்பாளர் முஸ்தாக் அகமது ஆகியோர் கலந்து சிறப்புரையாற்றினர்.
மேலும் இந்த தாக்குதலை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பியதுடன், இந்த தாக்குதலை எந்த மதத்தினரும் ஒப்பிட்டு அரசியல் செய்யவேண்டாம் என கோரிக்கை விடுத்தனர்.
இந்த போராட்டத்தில் எஸ்.டி.பி.ஐ.கட்சியின் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட அமைப்பு செயலாளர் அய்னுல் ஹக், மாவட்ட துணை தலைவர் ராஜா முகமது மாவட்ட செயலாளர் கோபி, அமீர் உசேன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் தமீம் அன்சாரி மற்றும் தாம்பரம் தொகுதி தலைவர் சேக் முகமது மற்றும் தாம்பரம் தொகுதி நிர்வாகிகள் இப்ராஹிம் ஷா, ஈசா, ஏஞ்சலோ, அப்துல் ரசாக், தமீம் அன்சாரி மற்றும் பல்லாவரம் தொகுதி நிர்வாகிகள் ரசாக் பாய், ரிஸ்வான் மற்றும் மகளிர் அணியினர் என ஏராளாமானோர் கலந்து கொண்டனர்