மயிலாடுதுறை டார்கெட் எவரெஸ்ட் கென்பிரிட்ஜ் பள்ளி மைதானத்தில் ரோட்டரி கிளப் ஆப் மாயூரம் டெல்டா சார்பில் இந்த போட்டி நடத்தப்பட்டது. சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாள்கள் நடைபெற்ற போட்டியில் மயிலாடுதுறை, திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் இருந்து 12 அணிகள் பங்கேற்றன. 8 ஓவர்கள் கொண்ட இந்த போட்டியில் 8 வீரர்கள் விளையாடினர். லீக் சுற்று முறையில் நடைபெற்ற போட்டியில் இறுதிப்போட்டிக்கு திருச்சி, பாண்டிச்சேரி அணிகள் தகுதி பெற்றன. இறுதிப்போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
போட்டியை ரோட்டரி மாவட்ட ஆளுநர் எஸ்.பாஸ்கரன் தொடக்கி வைத்தார். இதில் முன்னாள் ரோட்டரி ஆளுநர் பாலாஜிபாபு, ரோட்டரி நிர்வாகிகள் ஆன்டனி விஜய், ஸ்ரீபிரதீப்ராஜ், மணிமாறன்; உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற திருச்சி அணி மற்றும் 2-ஆம்; இடம் பிடித்த புதுச்சேரி அணிகளுக்கு ரோட்டரி வருங்கால ஆளுநர் லியோனி கோப்பையை வழங்கி கௌரவித்தார். மேலும், ஆட்ட நாயகன், தொடர் நாயகன், சிறந்த பவுலர் ஆகிய வீரர்களுக்கு கேடயங்கள் வழங்கப்பட்டன. இதில், ரோட்டரி நிர்வாகிகள் குருகோவிந்த், வெற்றிவேந்தன், வி.வீரமணி உள்ளிட்டோர் ஏற்பாடு செய்திருந்தனர்.