சென்னை, டிச-03,
அல்ட்ரா வயலட் (யூ.வி ) ஸ்பேஸ் ஸ்டேஷன் என்னும் இருசக்கர வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷனுடன் உதிரிபாகங்கள் விற்பனை மையம் சென்னை அண்ணாசாலை சைதாப்பேட்டையில் புதிதாக துவக்கப்பட்டுள்ளது.
இது சென்னையின் மையமாக விளங்குவதால் மின்சார இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு பயனுள்ளதாகவும், எளிதாக அணுகக்கூடியதாகவும் இருக்கும்
இந்நிகழ்ச்சியில் பேசிய அல்ட்ரா வயலட் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலரும் இணை நிறுவனருமான நாராயண் சுப்ரமணியம் கூறியதாவது:- இந்த யூ.வி இருசக்கர சார்ஜிங் ஸ்டேஷன் வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் நோவா டி.சி உடன் பொருத்தப்பட்டிருக்கும்
உயர் செயல்திறன் மோட்டார் சைக்கிளான எஃப்-77 மாச் – 2-ன்வாடிக்கையாளர்களுக்கு வேகமாக சார்ஜ் செய்யும் உள்கட்டமைப்பு வழங்கும்.
இந்நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு எதிர்கால பயன்கள் பற்றிய பார்வையை வழங்குகிறது. இது ஒரு விரிவான 3 – எஸ் வசதியாக செயல்படுவதை தவிர விற்பனை, சேவை மற்றும் உதிரி பாகங்களை வழங்குகிறது என்றார்.
இதைத் தொடர்ந்து தலைமை தொழில் நுட்ப அலுவலர் மற்றும் இணை நிறுவனர் நிரஜ் ராஜ்மோகன் கூறுகையில், “
அல்ட்ரா வயலட் உயர் செயல்திறன் கொண்ட மின்சார மோட்டார் சைக்கிள்களில் முன்னணியில் உள்ளது .
இது மின்மயமாக்கப்பட்ட எதிர்காலத்திற்கு வழி வகுக்கிறது.இதனால் அல்ட்ரா வயலட்டில், தொழில் நுட்ப வடிவமைப்பை உள்ளடக்கிய தயாரிப்புகளை உருவாக்குவதற்கான முயற்சி மேம்படும். தமிழ்நாடு மற்றும் மற்ற மாநிலங்கள் அதிக செயல்திறன் கொண்ட மின்சார மோட்டார் சைக்கிள்
அல்ட்ரா வயலட் எஃப் – 77 மாச்-2 க்கான முன்பதிவுகள் ஆன்லைனிலும், மையத்திலும் கிடைக்கின்றன.
அதே போல் சென்னையில் உள்ள வாடிக்கையாளர்கள், யூ .வி யைவரையறுக்கும் புதுமை மற்றும் வடிவமைப்புடன் கூடிய தடையற்ற சேவையை இப்போது நேரடியாக அனுபவிக்க முடியும். என்றார்.