வேலூர், ஜூலை 28 –
வேலூர் மாவட்டம், SSTA இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் சம வேலைக்கு சம ஊதியம் வாக்குறுதி 20,000 இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய முரண்பாட்டை களைவதாக வாக்குறுதி அளித்து 4 ஆண்டுகள் ஆகியும் நிறைவேற்றாததால் சிறை நிரப்பும் போராட்டத்திற்கு ஆயத்தமாக 1 நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் வேலூர் சத்துவாச்சாரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்றது.
இதில் மாநில பொறுப்பாளர்கள் மாநிலத் தலைவர் ரெக்ஸ் ஆனந்த் குமார், மாநில பொதுச் செயலாளர் ராபர்ட், மாநில பொருளாளர் கண்ணன், மாநிலத் துணைத் தலைவர் ஞானசேகரன், மாநில துணைச் செயலாளர் வேல்முருகன், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட அமைப்புக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் வேலூர் மாவட்டம் விஜயன், பானுரேகா, ஏழுமலை, திருப்பத்தூர் மாவட்டம் மதியழகன், திருமூர்த்தி, மஞ்சுநாதன், இராணிப்பேட்டை மாவட்டம் துரை, சம்பத், விஜயகுமார் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.