நாகர்கோவில் ஜூலை 5
குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள சுசீந்திரம் அருள்மிகு ஸ்ரீ தாணுமாலயா சுவாமி கோவிலில் நடைபெறும் கும்பாபிஷேக திருப்பணிகளை பாஜக மாவட்ட தலைவர் தர்மராஜ் பார்வையிட்டார்.
அதன்பின் அவர் கூறியதாவது:-
20 ஆண்டுகளுக்கு பிறகு
ஸ்ரீ தாணுமாலய சுவாமி கோவில் கும்பாபிஷேக திருப்பணிகள் நடைபெறுவது மகிழ்சியாக இருந்தாலும்
தமிழக அரசாங்கமும்,
அறநிலையத்துறையும்
கும்பாபிஷேக எண்ணிக்கையை காட்டுவதற்காக
பல கோவில்களில்
அவசர கதியில்
ஏனோ தானோ என வேலைகள் செய்து கும்பாபிஷேகத்தை பெயரளவில் நடத்தி வருகின்றனர்.
சுசீந்திரம்
தாணுமாலயன் கோவில்
புராணகாலத்தோடு தொடர்புடைய ஆயிரம் ஆண்டுகளுக்கும் பழமையான கோவில்
இந்த கோவில் கும்பாபிஷேக பணிகள் சரிவர நடைபெறவில்லை என பொதுமக்களும் , பக்தர்களும் குறை கூறி வேதனை படுகின்றனர்.
90 ஆயிரம் சதுர அடி கொண்ட
தாணுமாலய சுவாமி கோவில் மேல் மண்டபத்தில்
வெறும் 20 ஆயிரம் சதுர அடிக்கு மட்டுமே தரை ஓடுகள் பதிக்கின்றனர்.
தரை ஓடுகள் பதித்து
40 ஆண்டுகள் ஆகிறது.
கோவில் மேல் மண்டபத்தில் அனைத்து ஓடுகளுமே வெயிலில் பொரிந்து வெடிப்புகள் காணப்படுகிறது.
எனவே மண்டபத்தில் அனைத்து தரை ஓடுகளையும் மாற்றி
புதிய ஓடுகள் பதிக்க வேண்டும்.
அனைத்து சன்னதிகளும் பழுது பார்க்க வேண்டும்.
கோவில் கொடிமரம் சாய்ந்து நிக்கிறது அதை சரி செய்ய வேண்டும்.
பல சன்னதிகளில்
மூல விக்கிரகங்கள் ஆடுகிறது
அதற்கான செடிபந்தனம் செய்ய வேண்டும்.
ஏராளமான வேலைகள் கோவிலில் உள்ளது
அனைத்தையும் சரி செய்த பிறகே
கும்பாபிஷேகத்துக்கான தேதியை குறிக்க வேண்டும்.
அவசரகதியில்
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்தியதைப் போல்
சுசீந்திரம் கோவிலில் அதே போன்ற முயற்சியை எடுத்தால்
மாவட்டம் தளுவிய போராட்டத்தை
குமரி மாவட்ட அறநிலயத்துறை சந்திக்க நேரிடும் என அவர் தெரிவித்தார். உடன்
மாவட்ட
பொது செயலாளர் வக்கீல் ஜெகநாதன், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய பார்வையாளர் சி.எஸ்.சுபாஷ்,
ஓன்றிய பொருப்பாளர் ரவீந்திரன்
பாஜக கவுண்சிலர் வள்ளிஅம்மாள்
மற்றும்
மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் இருந்தனர் .