பரமக்குடி,மே.17: பரமக்குடி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் மனோகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்”
பரமக்குடி வட்டார வேளாண்மை அலுவலகத்தின் கீழ் உள்ள கிராமங்களின் தகுதி உள்ள விவசாயிகள் பிரதம மந்திரி கௌரவ நிதி திட்டத்தில் பயன் பெற சிறப்பு முகாம் மே மாதம் முழுவதும் பரமக்குடி வட்டார வேளாண் விரிவாக்க மையம், இந்திய அஞ்சல் கட்டண வங்கி, பொது சேவை மையம் ஆகிய இடங்களில் நடைபெற்று வருகிறது.
நில உடமை பதிவேற்றம் மற்றும்
இ கே ஒய் சி பதிவேற்றம் செய்யாத விவசாயிகள் பதிவு செய்து கொள்ளலாம் . நில உடமை பதிவேற்றம் செய்த விவசாயிகளுக்கு மட்டுமே வரும் ஜூன் மாதத்தில் 20 வது தவணை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால், விவசாயிகள் உடனடியாக நில உடைமை பதிவேற்றம் செய்ய வேண்டும் .
இத்திட்டத்தில் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்கப்பட வேண்டும் இணைக்காத விவசாயிகள் உடனடியாக வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்.
2019 ஜனவரி முதல் தேதியில் இருந்து நிலப்பட்டா வைத்திருக்கும் தகுதி உடைய விவசாயிகள், இத்திட்டத்தில் பதிவு செய்யாமல் இருந்தால் உடனடியாக ஆதார் எண், நில உடமை ஆவணங்கள், வங்கி கணக்கு விவரம் ஆகியவற்றை பயன்படுத்தி
பி எம் கிசான் திட்ட வலைதளத்தில் பொது சேவை மையம் மூலம் பதிவு செய்ய வேண்டும் . இம் முகாமில் வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைத்தல்,
இ கே ஒய் சி, நிலம் தொடர்பான விவரங்களை பி எம் கிசான் வலைதளத்தில் புதுப்பித்தல் போன்ற வசதிகளை உள்ளதால் விவசாயிகள் இதனைப் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.